Valais இல் உள்ள Breithorn மலை உச்சியில் இடம்பெற்ற பராகிளைடிங் விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்து புதன்கிழமை பிற்பகல் 3 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
புறப்படும் போது, இந்த இவர்கள் பல நூறு மீட்டர் ஆழத்தில் சறுக்கியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்துக்கான காரணங்கள் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என்று பொலிசார் தெரிவித்தனர்.
சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள், உடனடியாக Valais கன்டோனல் மீட்பு அமைப்புக்கு தகவல் கொடுத்தனர்.
Air Zermatt இன் தேடுதலுக்குப் பின்னர் இரண்டு பேரும் சடலங்களாக கண்டுபிடிக்கப்பட்டனர்.
இது தொடர்பான விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன.
மூலம் -Swissinfo