கடந்த ஆண்டு சுவிட்சர்லாந்தில் பிறந்த குழந்தைகளில் அதிகளவானோருக்கு மியா மற்றும் நோவா ஆகிய பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன.
பெண் குழந்தைகளுக்கு அதிகம் சூட்டப்பட்ட எம்மா என்ற பெயரை வீழ்த்தி, மியா என்ற பெயர் முதலிடத்திற்கு வந்திருக்கிறது.
அதே நேரத்தில் ஆண் குழந்தைகளுக்கு நோவா என்ற பெயரே அதிகளவில் சூட்டப்பட்டு, அது முதல் இடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது.
பெண் குழந்தைகளுக்கு மியாவைத் தொடர்ந்து எம்மா மற்றும் சோபியா ஆகிய பெயர்களும், ஆண் குழந்தைகளுக்கு நோவாவைத் தொடர்ந்து லியாம் மற்றும் மட்டியோ ஆகிய பெயர்களும் அதிகளவில் சூட்டப்பட்டுள்ளன என்று மத்திய புள்ளியியல் அலுவலகம் (FSO) தெரிவித்துள்ளது.
ஏற்கனவே 2013, 2015, 2016 மற்றும் 2019 முதல் 2021 வரை தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்துள்ள மியா ஏழாவது முறையாக இந்தப் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது.
2010, 2011, 2013 முதல் 2017 வரை மற்றும் 2021 மற்றும் 2022 இல் முதலிடத்தைப் பிடித்த நோவா என்ற பெயர் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக மிகவும் பிரபலமான பெயர்களில் ஒன்றாக உள்ளது.
மூலம் -Swissinfo