6.8 C
New York
Monday, December 29, 2025

15 ஆயிரம் தொன் உருளைக்கிழங்கு இறக்குமதி.

உருளைக்கிழங்கு அறுவடைக்கான போதுமானளவில் இல்லாததால்,  சுவிஸ் அரசாங்கம் உருளைக்கிழங்கு இறக்குமதி ஒதுக்கீட்டை 15,000 தொன்கள் அதிகரிப்பதாக அறிவித்துள்ளது.

ஈரமான மற்றும் ஈரப்பதமான வானிலை காரணமாக உருளைக்கிழங்கு செய்கை இந்த வசந்த காலத்தில் கடினமாக உள்ளது, என்றும், மிகக் கடுமையான தொற்று நோய் தாக்கங்கள் காணப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் வகையில், மத்திய விவசாய அலுவலகம் செப்ரெம்பர் 1 ஆம திகதி முதல் மேலும் 15,000 தொன் உருளைக்கிழங்கை இறக்குமதி செய்ய அங்கீகாரம் அளித்துள்ளது.

இந்த ஆண்டு இறுதி வரை இந்த இறக்குமதி அனுமதி செல்லுபடியாகும்.

மூலம் -Swissinfo

Related Articles

Latest Articles