ஜெர்மனியின் சொலிங்கன் நகரின் 650 ஆவது ஆண்டு விழாவில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் 3 பேர் உயிரிழந்தனர்.
இந்தச் சம்பவத்தில் மேலும், 4 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக இன்று அதிகாலை பொலிசார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
ஆயிரக்கணக்கான மக்கள் நிகழ்வில் பங்கேற்றிருந்த நிலையில் ஒருவர் திடீரென கண்டபடி கத்திக்குத்து தாக்குதலை நடத்த தொடங்கினார்.
நேற்றிரவு 9.45 மணியளவில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலை அடுத்து குற்றவாளி தப்பிச் சென்றுள்ளார் என்றும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
அவரைக் கைது செய்வதற்காக அந்தப் பகுதியை பொலிசார் மூடியுள்ளனர்.
ஹெலிகொப்டர் உதவியுடன் தேடுதல் மீட்பு நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றனர்.
இது ஒரு இலக்கு வைக்கப்பட்ட தாக்குதல் என்றும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.