சுவிற்சர்லாந்தின் தொலைத்தொடர்பு நிறுவனமான, Swisscom மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
நேற்று முற்பகல் சுமார் 11:30 மணியளவில் இந்த சைபர் தாக்குதல் இடம்பெற்றது.
இதையடுத்து Twint போன்ற கட்டணச் சேவைகள் இடைநிறுத்தப்பட்டன.
எனினும், Swisscom தொலைத்தொடர்பு நிறுவனம் DDoS தாக்குதலை மாலை 4 மணியளவில் தடுத்து நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது.
இருப்பினும், நிபுணர்கள் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
தாக்குதலின் பின்னரும் இணையம், தொலைக்காட்சி மற்றும் தொலைபேசிக்கான தனியார் வாடிக்கையாளர் சேவைகள் சீராகச் செயற்பட்டதாகவும், அனைத்து இ-பாங்கிங் சேவைகள் மற்றும் மொபைல் பணம் செலுத்துதல் ஆகியவை தாக்குதலை முறியடித்த பின்னர் பிற்பகலில் மீண்டும் இயங்கித் தொடங்கின என்றும் நிறுவனத்தின் பேச்சாளர் கூறினார்.
இது ஒரு பிரதான தாக்குதல் என்று தெரிவித்துள்ள அந்த நிறுவனம் தாக்குதலுக்கு யார் காரணம் என்பதை விபரிக்கவில்லை.
மூலம் – zueritoday