திபெத் ஆன்மீகத் தலைவர் தலாய்லாமா குறுகிய பயணமாக சுவிட்சர்லாந்து வந்துள்ளார்.
சுவிஸ் வந்துள்ள அவரை, சூரிச் அருகே உள்ள Opfikon விமான நிலைய ஹோட்டலில் நூற்றுக்கணக்கான திபெத்தியர்கள் வரவேற்றனர்.
ஹில்டன் சூரிச் விமான நிலையத்திற்கான வீதியில் உள்ள நடைபாதை வெள்ளிக்கிழமை பிற்பகல் ரிப்பன்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
மாலை 5.30 மணிக்கு தலாய் லாமா வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் முன்கூட்டியே ஏராளமானோர் அங்கு திரண்டனர்.
சிலர் பாரம்பரிய உடையில் வந்திருந்தனர், மற்றவர்கள் மலர்கள், தூபக் குச்சிகள் அல்லது திபெத்தியக் கொடிகளைக் ஏந்தியிருந்தனர்.
இரவு 7.15 மணிக்கு தலாய்லாமா பொலிசாரின் பாதுகாப்புடன் வந்தபோது, கூட்டத்தினர் அமைதியாக அவரை வரவேற்றனர்.