Bioux இல் ஒரு விவசாயி தனது உழவு இயந்திரத்தில் ஒரு இறந்து போன பசுவின் உடலை கிராமத்தின் நடுவே தொங்கவிட்டு எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.
ஓநாயினால் தாக்கப்பட்டு அந்தப் பசு உயிரிழந்ததாக விவசாயி கூறினார்.
ஓநாய்களுக்கு எதிராக கன்டோன் எதுவும் செய்யவில்லை என்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அவர் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டார்.
புதன்கிழமை நண்பகல் வரை, அந்த விவசாயி பசுவின் உடலுடன் வீதியில் போராட்டத்தில் ஈடுபட்டார்.
பின்னர் பொலிசார் தலையிட்டு அவரை அனுப்பிவைத்தனர்.