சூரிச்சின் நீடர்டோர்ஃப் மாவட்டத்தில் சனிக்கிழமை காலை, அடையாளம் தெரியாத நபர்களால் கத்தியால் குத்தப்பட்டு ஒருவர் பலத்த காயம் அடைந்தார்.
சூரிச் நகர பொலிசார் சாட்சிகளைத் தேடி வருகின்றனர்.
காலை 6 மணியளவில், வாக்குவாதத்தைத் தொடர்ந்து ஒருவர் காயமடைந்ததாக பொலிசாருக்கு தகவல் கிடைத்தது.
அவசர சேவைகள் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற போது, ஒரு நபர் உடலில் பலத்த வெட்டுக் காயத்துடன் இருப்பதைக் கண்டனர்.
பொலிசார் வருவதற்குள் அடையாளம் தெரியாத குற்றவாளிகள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
பலத்த காயமடைந்த நபர் அம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.