Gouda சீஸ் பிஸ்கட்களை, Alnatura சுப்பர் மார்க்கெட்களில் இருந்து மீளப் பெறுவதாக Migros அறிவித்துள்ளது.
இந்த பிஸ்கட்களில், வெளிநாட்டு உலோகப் பொருள்கள் இருக்கக் கூடும் என்பதாலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
2025 பிப்ரவரி 15 முதல் 2025 மே 15, வரையில், காலாவதி திகதிகளைக் கொண்ட, Gouda சீஸ் பிஸ்கட்களை வீட்டில் வைத்திருக்கும் எவரும், அவற்றை உட்கொள்ள வேண்டாம் என்ற கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
நுகர்வோர் பாதுகாப்பு நலன்களுக்காக, பாதிக்கப்பட்ட பொதிகளை விற்பனையில் இருந்து திரும்பப் பெற்றுள்ளது.
வீட்டில் குறிப்பிடப்பட்ட பொதிகளை வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் அதை Alnatura சூப்பர் மார்க்கெட்டுக்கு திருப்பி அனுப்பலாம்.
நிச்சயமாக அதற்குப் பதிலாக ஒரு மாற்றீட்டைப் பெற முடியும் என, Migros தெரிவித்துள்ளது.
மூலம்- zueritoday

