சியோனில் நேற்று பிற்பகல் 3.15 மணியளவில் FC Sion மற்றும் FC Basel அணிகளுக்கு இடையிலான கால்பந்துப் போட்டியின் போது, ஆதரவாளர் குழுக்களுக்கிடையில மோதல் இடம்பெற்றது.
இந்த மோதலில் 18 வயதுடைய சுவிஸ் இளைஞன் சிறு காயங்களுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த மோதல் ஏற்பட்ட சூழல் மற்றும் பின்னணி இன்னமும் தெளிவாக இல்லை என்று, Valais கன்டோனல் பொலிசார் தெரிவித்தனர்.
கன்டோனல் மற்றும் பிராந்திய காவல்துறையின் பாதுகாப்புப் படைகள் இரண்டு எதிரெதிர் குழுக்களையும் காயமடைந்த நபரையும் கண்டுபிடித்தனர்.
மூலம் – Theswisstimes

