4.8 C
New York
Monday, December 29, 2025

பாடசாலைக்கு குண்டு மிரட்டல் – மாணவர்களை வெளியேற்றி சோதனை.

Vaud  கன்டோனில்,   Yverdon-les-Bains இல் உள்ள  Collège Léon-Michaud  என்ற பாடசாலைக்கு குண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

இன்று காலை 9 மணியளவில் குண்டு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதை அடுத்து, வகுப்பறைக் கட்டடங்களில் இருந்து மாணவர்கள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.

இதையடுத்து குண்டு அகற்றும் நிபுணர்கள் உள்ளிட்ட பொலிசார் பாடசாலை கட்டடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.

சிறுவர்களை கொல்லுவோம் என மின்னஞ்சல் மூலம் கடந்த ஜூன் மாதமும் இதே பாடசாலைக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதை அடுத்து பரீட்சை நடந்து கொண்டிருந்த போது வகுப்பறைகளில் இருந்து மாணவர்கள் வெளியேற்றப்பட்டனர்.

11 இற்கும் 17இற்கும் இடைப்பட்ட வயதுடைய 800 மாணவர்கள் இந்தப் பாடசாலையில் கல்வி கற்கின்றனர்.

மூலம் – 20min.

Related Articles

Latest Articles