3 C
New York
Monday, December 29, 2025

அதிகாலையில் துப்பாக்கிச் சூடு- ஒருவர் படுகாயம்.

Baden  இல் நேற்றுக் காலை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் படுகாயம் அடைந்தார்.

நேற்று அதிகாலை 4 மணியளவில் வாக்குவாதம் ஒன்றை அடுத்தே, இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது.

இதையடுத்து பெருமளவில் பொலிசார் குவிக்கப்பட்டு தேடுதல் நடத்தப்பட்டது.

இதன் போது,  துப்பாக்கிச் சூடு நடத்திய33 வயதான சுவிஸ் நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

துப்பாக்கிச் சூட்டில் படுகாயம் அடைந்த 34 வயதான ஒருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக Aargau கன்டோனல் பொலிசார் உறுதிப்படுத்தினர்.

மூலம்- 20min

Related Articles

Latest Articles