3 C
New York
Monday, December 29, 2025

குறைந்த விலையில் பெட்ரோல் – வரிசை கட்டும் வாகனங்கள்.

Gossau இல் புதிதாக திறக்கப்பட்டுள்ள ஒரு பெட்ரோல் நிலையம், அப்பகுதியில் உள்ள ஏனைய பெட்ரோல் நிலையங்களை விட குறைந்த விலைக்கு பெட்ரோல் விற்பனையில் ஈடுபட்டுள்ளது.

பெட்ரோல் விலை குறைந்திருப்பதால், வாடிக்கையாளர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Gossau SG இல் உள்ள Etzelpark இல் இந்த புதிய பெட்ரோல் நிலையம் அமைந்துள்ளது.

சென்கேலனின் புறநகரில், ஒரு லிட்டர் அன்லெட் பெட்ரோலின் விலை இன்னமும்  1.82 பிராங்குகளாக உள்ளன.

வெள்ளியன்று, புதிய பெட்ரோல் நிலையத்தில், ஈயம் இல்லாத ஒரு லிட்டர் 95  பெட்ரோல் 1.57 பிராங்குகளாக இருந்தது. Etzelpark இல் பெட்ரோல் விலை  25 சதம்  குறைவாக உள்ளது.

35 லிட்டர் கொள்கலன் ஒன்றில் நிரப்பும் போது,  8.75 பிராங்குகள் இலாபம் கிடைக்கும்.

இதையடுத்து. Avia, BP  மற்றும்  Coop, உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள பெரிய பெட்ரோல் நிலையங்களும் தங்கள் விலையை மாற்றியுள்ளன

மூலம்- 20min

Related Articles

Latest Articles