24.4 C
New York
Wednesday, July 1, 2026

ஜெர்மனியில் அடுத்தடுத்து விழுந்த 3 விமானங்கள்.

ஜெர்மனியில் நேற்று  மூன்று விமானங்கள் விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்தனர். மேலும் இருவர் பலத்த காயம் அடைந்தனர்.

விபத்துக்குள்ளான விமானங்கள் சிறிய ரகத்தச் சேர்ந்தவையாகும்.

விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு சற்று நேரத்தில் நடந்த ஒரு விபத்தில், 2 பேர் உயிரிழந்தனர்.

மற்றொரு விமானம் ஓடுபாதையில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் விபத்துக்குள்ளானதில், அதில் இருந்த இரண்டு பேர் காயம் அடைந்தனர்.

மற்றொரு விமானம் பற்றைக்காட்டுக்குள் விழுந்ததில் விமானி உயிரிழந்தார்.

ஒரே நாளில் வெவ்வேறு இடங்களில் நடந்துள்ள இந்த விபத்துகளுக்கான காரணங்கள் தெளிவாகத் தெரியவரவில்லை.

மூலம் – bluewin

Related Articles

Latest Articles