21 C
New York
Monday, August 17, 2026

சூரிச் விமான நிலையத்தில் 15 கிலோ போதைப்பொருளுடன் அமெரிக்க பெண் கைது.

சூரிச் விமான நிலையத்தில் நேற்று முன்தினம் 15 கிலோ கிராம் கெட்டமைன் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதனைக் கொண்டு செல்ல முயன்ற அமெரிக்கப் பெண் ஒருவரை விமானம் புறப்படுவதற்கு சற்று முன்னர், சுங்கம் மற்றும் எல்லைப் பாதுகாப்புக்கான மத்திய அலுவலக அதிகாரிகளிடம் சிக்கினார்.

ஹம்பேர்க்கில் இருந்து, நியூயோர்க் சென்று கொண்டிருந்த  27 வயதுடைய அமெரிக்கப் பெண், சூரிச் கன்டோனல் பொலிசாரால் கைது செய்யப்பட்டார்.

போதைப்பொருள் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில்,  கைது செய்யப்பட்ட அவர் விசாரணைக்குப் பிறகு சட்டமா அதிபர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டார்.

மூலம்- Zueritoday

Related Articles

Latest Articles