26.7 C
New York
Thursday, September 11, 2025

சூரிச்சில் சொத்து மதிப்பீடு தொடங்கியது- வீட்டு வரிகள் உயரும்.

சூரிச் கன்டோன் விலைவாசி உயர்வு காரணமாக அனைத்து சொத்துக்களையும் மறுமதிப்பீடு செய்து வருகிறது.

இதனால், 2027 ஆம் ஆண்டிலிருந்து வீட்டு உரிமையாளர்களுக்கு கணிசமானளவு  வரி அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கென அரசாங்கம் மீண்டும் ஒரு கடினமான ஒழுங்குமுறையை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.

பல சொத்துக்கள் குறைவாக மதிப்பிடப்பட்டுள்ளன என்பதாலும், கடைசியாக மறுமதிப்பீடு 2009 இலேயே நடத்தப்பட்டது என்பதாலும், இரண்டு நீதிமன்றத் தீர்ப்புகளால்  இந்த மறுமதிப்பீடு முன்னெடுக்கப்படுகிறது.

இதற்கமைய, சொத்து வரி சராசரியாக 48 சதவீதம் உயரும்.

ஒற்றைக் குடும்ப வீடுகளுக்கான வாடகை சராசரியாக 11 சதவீதமும், குடியிருப்புகளுக்கான வாடவை 10 சதவீதமும்  அதிகரிக்கும்.

மறுமதிப்பீட்டின் விளைவாக கன்டோன் மற்றும் நகராட்சிகள் ஒவ்வொன்றுக்கும் 85 மில்லியன் பிராங் கூடுதல் வருமானம் கிடைக்கும்.

மூலம்- zueritoday

Related Articles

Latest Articles