26.1 C
New York
Monday, July 7, 2025

வாகனத் தரிப்பிடத்தில் தீவிபத்து.

Rohrbach BE இல் உள்ள அடுக்குமாடி கட்டடத்தின் இரட்டை வாகனத் தரிப்பிடத்தில் புதன்கிழமை காலை தீ விபத்து ஏற்பட்டது.

இதனால் சொத்துக்களுக்கு பெரும் சேதம் ஏற்பட்டது. எனினும் எவருக்கும் காயம் ஏற்படவில்லை.

தீ வைத்ததாக சந்தேகத்தின் பேரில் ஒருவரிடம் பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த தீ விபத்து நேற்றுக் காலை 6 மணியளவில் ஏற்பட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர்.

எனினும், நிறுத்தப்பட்டிருந்த கார் மற்றும் இரட்டை வாகனத் தரிப்பிடம் முற்றிலும் எரிந்து நாசமானது.

தீ விபத்து தொடர்பாக ஒருவர் விசாரிக்கப்பட்டு வருகிறார்.  அவருக்கும் தீ விபத்தில் தொடர்பு இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.

மூலம் -Bluewin

Related Articles

Latest Articles