29.1 C
New York
Thursday, July 2, 2026

சூரிச்சில் சிக்கிய போதைப்பொருள் வியாபாரி.

சூரிச் கன்டோனல் பொலிசார் திங்கள்கிழமை ஒரு போதைப்பொருள் வியாபாரியை கைது செய்துள்ளனர்.

அவரிடம் இருந்து பல கிலோகிராம் போதைப்பொருட்களையும் அவர்கள் கைப்பற்றியுள்ளனர்.

​​​​28 வயதான துருக்கியர் ஒருவரை தடுத்து சோதனையிட்ட போது, அவரிடம் பல நூறு கிராம் கொகெய்ன் இருந்தது.

இதையடுத்தடுத்து அவரது வீட்டில் தேடுதல் நடத்திய போது,  1.5 கிலோ கொகெய்ன், 900 கிராம் ஹாஷிஸ், மற்றும் பல ஆயிரம் பிராங் பணம் என்பன கைப்பற்றப்பட்டன.

போதைப் பொருள் வியாபாரியை தடுப்புக் காவலில் வைக்குமாறு கோரப்பட்டுள்ளது.

மூலம் – Zueritoday

Related Articles

Latest Articles