Frauenfeld இல் ரயில் பயணி ஒருவரைத் தாக்கிய இரண்டு சந்தேக நபர்களை பொலிசார் கைது செய்தனர்.
58 வயதான ரயில் பயணியை அவர்கள் மிகவும் மோசமாக தாக்கியதில் காயமடைந்த அவர், மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
- Advertisement -

Weinfelden இருந்து Frauenfeld செல்லும் ரயிலில் வியாழக்கிழமை மாலை 5 மணியளவில் இரண்டு இளைஞர்களுக்கும் திருமணமான தம்பதியருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதன்போதே, 18 வயதுடைய சுவிஸ் இளைஞனும் மற்றொரு இளைஞனும் சேர்ந்து 58 வயதுடைய நபரைத் தாக்கியுள்ளனர்.
இதையடுத்து தப்பியோடிய அந்த இரு இளைஞர்களையும் பொலிசார் துரத்திப் பிடித்துள்ளனர்.


