4.5 C
New York
Wednesday, February 11, 2026

ரயில் பயணியை தாக்கிய 2 பேர் கைது.

Frauenfeld இல்  ரயில் பயணி ஒருவரைத் தாக்கிய இரண்டு சந்தேக நபர்களை பொலிசார் கைது செய்தனர்.

58 வயதான ரயில் பயணியை அவர்கள் மிகவும் மோசமாக தாக்கியதில் காயமடைந்த அவர், மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

Weinfelden  இருந்து  Frauenfeld செல்லும் ரயிலில் வியாழக்கிழமை மாலை 5 மணியளவில்  இரண்டு இளைஞர்களுக்கும் திருமணமான தம்பதியருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதன்போதே, 18 வயதுடைய சுவிஸ் இளைஞனும் மற்றொரு இளைஞனும் சேர்ந்து 58 வயதுடைய நபரைத் தாக்கியுள்ளனர்.

இதையடுத்து தப்பியோடிய அந்த இரு இளைஞர்களையும் பொலிசார் துரத்திப் பிடித்துள்ளனர்.

Related Articles

Latest Articles