21.6 C
New York
Friday, September 12, 2025

பொலிசாரின் பெயரில் போலி மின்னஞ்சல்.

பெடரல் பொலிசாரின் பெயரில் போலி மின்னஞ்சல்கள் அனுப்பப்படுவதாக  Schaffhausen பொலிசார் எச்சரித்துள்ளனர்.

Schaffhausen கன்டோனில் உள்ள ஒருவருக்கு பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டிருப்பதாக குற்றம்சாட்டி கடந்த வார இறுதியில் மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது.

அதில், அவருக்கு எதிராக பல நீதிமன்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன என்றும், குழந்தை ஆபாச படங்கள், இணைய ஆபாசங்கள் மற்றும் பாலியல் குற்றங்கள் ஆகியவை அதில் அடங்கியுள்ளதாகவும் கூறப்பட்டிருந்தது.

அனுப்பியவர் Fedpol எனப்படும், பெடரல் பொலிஸ் அலுவலகம் என்று கூறப்பட்டிருந்தது.

அவர் செய்த குற்றங்களுக்காக, 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் 75,000 பிராங்குகள் வரை அபராதத்தை எதிர்கொள்கிறார் என்றும்,

இதுகுறித்து 72 மணி நேரத்திற்குள் பதிலளிக்கவில்லை என்றால், அரசு வழக்கறிஞர் அலுவலகம் பிடியாணை பிறப்பிக்கும் என்றும் அந்த மின்னஞ்சலில் கூறப்பட்டிருந்தது.

ஆனால், அந்த மின்னஞ்சல் போலியானது என்பது தெரியவந்தது.

Schaffhausen பொலிசார்  இதுகுறித்து எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அந்த நபர் மோசடியை அடையாளம் கண்டு, சம்பவத்தை பொலிசில் முறையிட்டுள்ளதாதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

மூலம்-zueritoday

Related Articles

Latest Articles