7.1 C
New York
Monday, December 29, 2025

பாலத்தில் நொருங்கிய கார்கள்.

Menzingenஇல் உள்ள Lorzentobel பாலத்தில் வெள்ளிக்கிழமை காலை, ஒரு பாரிய விபத்து இடம்பெற்றுள்ளது.

காலை 11 மணியளவில், Zug, Menzingen இல் உள்ள Lorzentobel பாலத்தில் இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.

ஒரு வாகனத்தின்ஓட்டுநரான 45 வயதுடைய நபர் வாகனத்தில் சிக்கிக்கொண்டார்.

Zug நகரின் தன்னார்வ தீயணைப்புத் துறையைச் சேர்ந்த சாலை மீட்புக் குழு அந்த நபரை அவரது வாகனத்திலிருந்து மீட்டெடுத்தது.

பலத்த காயமடைந்த அவரை அவசர சிகிச்சைப் பிரிவினர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

விபத்தில் சிக்கிய இரண்டாவது காரின்  82 வயதான ஓட்டுநரும், பலத்த காயம் அடைந்து முதலுதவி சிகிச்சைக்குப் பின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மூலம்-zueritoday

Related Articles

Latest Articles