26.5 C
New York
Thursday, September 11, 2025

இருவரை நாடு கடத்திய சுவிஸ் – இனி அடுத்தடுத்து நடக்கும்.

சுவிட்சர்லாந்து இரண்டு ஆப்கானிஸ்தானியர்களை நாடு கடத்தியுள்ளது.

இது 2019 க்குப் பின்னர், ஆப்கானிஸ்தானுக்கு நாடு கடத்தப்பட்ட முதல்  சந்தர்ப்பம் இதுவாகும்.

நீதி அமைச்சின் பேச்சாளர் ஒருவர் இதனை உறுதிப்படுத்தினார்.

குடியேற்றத்திற்கான மாநில செயலகம் (SEM) வெள்ளிக்கிழமை இரண்டு பேரையும் நாடு கடத்துவது பற்றி கன்டோன்களுக்கு தகவல் தெரிவித்திருந்தது.

அவர்கள் சுவிட்சர்லாந்தின் உள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் கடுமையான குற்றவாளிகள் என்று குடியேற்றத்திற்கான மாநில செயலகத்தின் துணை இயக்குனர் Vincenzo Mascioli தெரிவித்தார்.

இரண்டு ஆப்கானியர்களும் புறப்படுவதற்கு முன் சுவிஸ் அதிகாரிகளிடமிருந்து 500 பிராங்குகளைப் பெற்றுக் கொண்டனர்.

மேலும் நாடுகடத்தல்கள், முடிந்தவரை விரைவாக பின்பற்றப்பட உள்ளதாக Vincenzo Mascioli  தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த 13 தீவிர குற்றவாளிகள் இன்னமும் சுவிட்சர்லாந்தில் உள்ளனர்.

மூலம்  – swissinfo.

Related Articles

Latest Articles