-0.2 C
New York
Tuesday, December 30, 2025

சூரிச்சில் சைக்கிளுக்கும் போக்குவரத்து வரியா?

சூரிச் கன்டோனில் சைக்கிள் ஓட்டுபவர்கள் போக்குவரத்து வரிகளை செலுத்த வேண்டும் என சட்டத்தரணி ஒருவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

சைக்கிள் பாதைகளின் விரிவாக்கத்திற்காக பங்களிப்புச் செய்வதற்காக,அவர்களிடம் வரி வசூரிக்க வேண்டும் என்று, ஒரு தனிப்பட்ட முயற்சியை கன்டோனல் கவுன்சிலுக்கு சமர்ப்பித்துள்ளார்.

தனி நபர் முன்முயற்சி கன்டோனல் கவுன்சிலை நிறைவேற்ற வேண்டுமென்றால், 60 உறுப்பினர்கள்  அல்லது கவுன்சிலின் மூன்றில் ஒரு பகுதியினர் அதனை ஆதரிக்க வேண்டும். இது கடினமாக இருக்கும்.

Baselland  அல்லது Lucerne போன்ற ஏனைய கன்டோன்களில்  இதே போன்ற கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டன.

மூலம்- 20min

Related Articles

Latest Articles