23.5 C
New York
Thursday, September 11, 2025

நள்ளிரவில் மோதிக் கொண்ட ஐஸ் ஹொக்கி ரசிகர்கள் – பலர் காயம்.

Ambri-Piotta மற்றும் Lugano அணிகளுக்கு இடையே நடந்த ஐஸ் ஹொக்கி போட்டியில் ஏற்பட்ட கலவரத்தில் பலர் காயமடைந்தனர்.

 Gottardo Arena வில் வெள்ளிக்கிழமை இரவு 11 மணியளவில் Ambri- Piottaஅணிகளுக்கும் இடையே நடந்த போட்டி 2:1  என்ற அடிப்படையில் முடிவடைந்தது.

இதையடுத்து,  Ambri அணி தேசிய லீக்கில் இரண்டாமிடத்தைப் பிடித்ததுடன்  Lugano அணி ஐந்தாமிடத்திற்கு தள்ளப்பட்டது.

இதையடுத்து, Ambri மற்றும் Lugano அணிகளின் ஆதரவாளர்கள்,  தென்கிழக்கு Locarnoவில் உள்ள Rivera,வில் சனிக்கிழமை அதிகாலை 1.30 மணியளவில் மோதிக் கொள்ளத் தொடங்கினர்.

சுமார் 20பேர் இந்த மோதல்களில் ஈடுபட்டனர். இந்த மோதல்களில் பலர் காயம் அடைந்தனர்.

பல பொலிஸ் குழுக்கள் விரைந்து சென்று மோதலில் ஈடுபட்டவர்களை அங்கிருந்து வெளியேற்றினர்.

மூலம்- zueritoday

Related Articles

Latest Articles