24.4 C
New York
Saturday, July 12, 2025

செப்ரெம்பரில் புகலிட விண்ணப்பங்கள் அதிகரிப்பு.

சுவிசில் செப்டம்பர் மாதம், புதிதாக 2,363 புகலிட விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது முந்தைய ஆண்டின் இதே காலப்பகுதியை  விட 40 சதவீதம் குறைவாகும்.

இருப்பினும், கடந்த ஓகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடுகையில், இந்த எண்ணிக்கை சுமார் 7 சதவீதம் அதிகரித்துள்ளது.

இந்த ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் 20,962 புகலிட விண்ணப்பங்களை  இடம்பெயர்வுக்கான  அரச செயலகம் பதிவு செய்துள்ளது.

2023 மற்றும் 2024 ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களுடன் ஒப்பிடுகையில், புகலிட விண்ணப்பங்கள் குறைந்துள்ளதாகவும் இடம்பெயர்வுக்கான  அரச செயலகம் அறிவித்துள்ளது.

செப்ரெம்பரில் 604 விண்ணப்பங்களுடன் ஆப்கானிஸ்தான் முதலிடத்தில் உள்ளது.

இருப்பினும், 2023 செப்ரெம்பருடன் ஒப்பிடும்போது, ​​ஆப்கானிஸ்தான் நாட்டினரின் விண்ணப்பங்களின் எண்ணிக்கை 59 சதவீதத்திற்கும் அதிகமாக குறைந்துள்ளது.

392 விண்ணப்பங்களுடன் துருக்கியும், 197 விண்ணப்பங்களுடன் எரித்திரியாவும், 191 விண்ணப்பங்களுடன் அல்ஜீரியாவும் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

மூலம் – zueritoday

Related Articles

Latest Articles