18.8 C
New York
Tuesday, September 9, 2025

நள்ளிரவில் பற்றிய தீ – அலறியடித்து ஓடிய அடுக்குமாடி குடியிருப்பாளர்கள்.

 Kloten இல் உள்ள  அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள சமையலறையில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது.

இன்று அதிகாலை 1.30 மணியளவில் இந்த தீவிபத்து ஏற்பட்டதாக சூரிச் பொலிசார் தெரிவித்தனர்.

இதையடுத்து அடுக்குமாடிக் கட்டடத்தில் வசித்து வந்த சுமார் 50 பேர்  பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.

இந்த தீவிபத்தில் 55 வயதுடைய ஒருவர்  எரி காயமடைந்தார்.

தீ அணைக்கப்பட்டதை அடுத்து வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டவர்கள் அதிகாலை 3 மணியளவில் மீளவும் திரும்பிச் செல்வதற்கு அனுமதிக்கப்பட்டனர்.

மூலம் – Zueritoday

Related Articles

Latest Articles