மத்திய கிழக்கில் நடந்து வரும் மோதல் காரணமாக, இஸ்ரேலுக்குச் செல்லும் மற்றும் அங்கிருந்து வரும் அனைத்து விமானங்களையும் தொடர்ந்து நிறுத்தி வைப்பதாக SWISS இன் தாய் நிறுவனமான Lufthansa, அறிவித்துள்ளது.
டெல் அவிவ் செல்லும் Lufthansa, Brussels Airlines, SWISS மற்றும் Austrian Airlines விமானங்கள் நவம்பர் 10ஆம் திகதி வரை ரத்து செய்யப்படும் என்று பிராங்பேர்ட்டில் உள்ள Lufthansa குழுமம் அறிவித்துள்ளது.
Eurowings நிறுவனத்தினால் இயக்கப்படும் ஜெட் விமானங்கள் நவம்பர் 30 வரை அங்கு தரையிறங்காது என்றும் அறிவி்க்கப்பட்டுள்ளது.
ரத்து செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்ட பயணிகள் தங்கள் விமானங்களை பிற்கால பயணத் திகதிக்கு இலவசமாக மறுபதிவு செய்யலாம் அல்லது கட்டணத்தை திரும்பப் பெறலாம்.
தற்போதைக்கு, பெய்ரூட் (நவம்பர் 30 வரை) மற்றும் தெஹ்ரான் (ஒக்டோபர் 30 வரை) விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
மூலம்- Swissinfo