கட்டடங்களின் கண்ணாடி அமைப்புகளில், பறவைகள் மோதி உயிரிழப்பதை தடுக்கும் வகையில், கட்டட சட்டத்தில் திருத்தம் செய்ய சூரிச் கண்டோனல் கவுன்சில், தீர்மானித்துள்ளது.
சுவிட்சர்லாந்தில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் மூன்று மில்லியன் பறவைகள் கண்ணாடியுடன் மோதுவதால் இறக்கின்றன.
இந்த நிலையில், கட்டடங்களில் கண்ணாடிகளைப் பொருத்துவது தொடர்பான விதிமுறைகளை மீளாய்வு செய்யும் வகையில் கட்டடங்கள் தொடர்பான சட்டத்தில் திருத்தம் செய்யப்படவுள்ளது.
இதன்படி, புதிய கட்டடங்கள் எதிர்காலத்தில் பறவைகளுக்கு ஏற்றதாக வடிவமைக்கப்பட உள்ளன.
நேற்று சூரிச் கன்டோனல் கவுன்சில் ஜன்னல் கண்ணாடிகள் மற்றும் கண்ணாடி முகப்புகளில் பறவைகள் மோதுவதில் இருந்து பாதுகாக்க திட்டமிடல் மற்றும் கட்டடச் சட்டத்தில் திருத்தம் செய்வது தொடர்பாக வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
இதில் 147 உறுப்பினர்கள் ஆதரவாகவும் 30 உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்தனர்.
இந்த தீர்மானம் எதிர்காலத்தில் பறவைகளுக்கு ஏற்ற வகையில் புதிய கட்டிடங்களை வடிவமைக்க உதவும்.
மூலம் -20min