புகலிட விடுதியில் இரண்டு பேருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு காயமடைந்துள்ளார்.
பலமுறை கத்திக்குத்துக்கு இலக்காகிய அவர், உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Zug கன்டோனில் உள்ள Artherstrasse புகலிட விடுதியில் ஞாயிறுநள்ளிரை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இரண்டு உக்ரேனிய புகலிடக் கோரிக்கையாளர்களே இந்த மோதலில் சம்பந்தப்பட்டுள்ளனர்.
இந்த மோதலின் தொடர்ச்சியாக உறங்கிக் கொண்டிருந்த தனது தங்குமிட சகாவான 23 வயது இளைஞனை 37 வயதுடைய நபர் கத்தியால் சரமாரியாக குத்தி காயப்படுத்தியுள்ளார்.
படுகாயம் அடைந்த இளைஞன் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறார். கத்தியால் குத்தியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மூலம் -20min