Fläsch GR இற்கு அருகே வேக கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று பசுக்களுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
Maienfeld நோக்கிச் சென்று கொண்டிருந்த கார் ஒன்று, Luzisteigstrasse இல் மற்றொரு வாகனத்தை முந்திச் செல்ல முயன்றபோது, கட்டுப்பாட்டை இழந்து, வீதியை விட்டு வெளியேறி, அருகிலுள்ள நிலத்தில் மேய்ந்து கொண்டிருந்த மூன்று கால்நடைகள் மீது மோதியது.
இந்தச் சம்பவத்தில் பசு ஒன்று சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன் இரண்டு பசுக்கள், காயமடைந்தன.
கார் சாரதியும் பயணியும், காயம் அடைந்துள்ளனர்.
மூலம் -20min