ஜெனிவாவில் இருந்து டப்ளின் சென்ற SWISS விமானம் புயல் காற்று காரணமாக அங்கு தரையிறங்க முடியாமல் மீண்டும் திரும்பி வந்துள்ளது.
டப்ளினுக்குச் சென்ற SWISS விமானம் தரையிறங்குவதற்கு முயற்சித்த போது, அஸ்லி சூறாவளியினால் முடியாமல் போனது.
இரண்டு முறை திரும்பத் திரும்ப முயற்சித்தும் விமானிகளால் அந்த விமானத்தை தரையிறக்க முடியவில்லை.
கடும் சூறைக்காற்றினால் விமானம் அங்குமிங்குமாக தள்ளாடி பக்கவாட்டாக திரும்பும் நிலை ஏற்படட்டது.
இதனால் வேறு வழியின்றி விமானத்தை ஜெனிவாவுக்கு திருப்பியுள்ளனர்.
இந்தச் சம்பவத்தில் பயணிகள் எவரும் காயமடையவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மூலம் -20min