சுவிட்சர்லாந்தின் கன்டோன்கள், ஆண்டுக்கு 12 ஞாயிற்றுக்கிழமைகளில் கடைகளைத் திறக்க அனுமதிக்கவுள்ளன.
தற்போது ஆண்டுக்கு 4 ஞாயிற்றுக்கிழமைகளில் மாத்திரம் கடைகளைத் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
இதனை12 ஆக அதிகரிப்பதற்கான முன்மொழிவு, சுவிஸ் செனட் குழுவினால் முன்வைக்கப்பட்டுள்ளது.
சூரிச் கன்டோனின் கோரிக்கையை அடுத்து, இந்த முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
செவ்வாய்க்கிழமை செனட்டின் பொருளாதார விவகாரக் குழுவில், இந்த முன்மொழிவுக்கு ஆதரவாக 10 பேரும், எதிராக 2 பேரும் வாக்களித்தனர்.
இதையடுத்து இந்த விடயம் குறித்து, பிரதிநிதிகள் சபையின் பொருளாதார விவகாரக் குழு அடுத்த முடிவை எடுக்கும்.
அதேவேளை, சிறிய மளிகைக் கடைகளை ஞாயிற்றுக்கிழமைகளில் திறக்க அனுமதிக்கும் வகையிலான, ஞாயிற்றுக்கிழமை வர்த்தக விதிகளை மேலும் தளர்த்துவதற்கு பிரதிநிதிகள் சபையால் முன்மொழியப்பட்ட யோசனையை செனட் குழு நிராகரித்துள்ளது.
மூலம் – swissinfo