சுவிட்சர்லாந்தில் மீண்டும் கோவிட் -19 தொற்று அதிகரித்து வருவதாக பெடரல் பொது சுகாதாரப் பணியகம் எச்சரித்துள்ளது.
கடந்த ஏழு நாட்களில் தொற்றாளர் எண்ணிக்கை சடுதியாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
தற்போது, KP.3 என்ற வகை திரிபு ஆதிக்கம் செலுத்தினாலும், XEC எனப்படும் கோவிட்டின் புதிய திரிபு, அதிகளவில் பரவத் தொடங்கியுள்ளது.
XEC திரிபினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, வாசனை மற்றும் சுவை இழப்பு போன்ற, கோவிட்-19இன் பழைய அறிகுறிகள் காணப்படுகின்றன. அத்துடன் பசியின்மையையும் ஏற்படுத்துகிறது.
XEC மிகவும் கடுமையான நோயை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் எதிர்பார்க்கவில்லை.
ஆபத்தில் நிலையில் உள்ளவர்கள், தடுப்பூசி போட வேண்டும் என்று BAG பரிந்துரைத்துள்ளது.
மூலம் -20min.