Basel இல் நடைபெறவுள்ள யூரோவிஷன் பாடல் போட்டியைத் தடுப்பதற்கான பொது வாக்கெடுப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
2025 மே 13 ஆம் திகதி முதல் 17 ஆம் திகதி வரை இந்தப் போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
- Advertisement -

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ள சுவிஸ் பெடரல் ஜனநாயக யூனியன், நவம்பர் 24ஆம் திகதி பொது வாக்கெடுப்பு நடத்தக் கோரி, 4203 பேரின் கையெழுத்துக்களை சமர்ப்பித்துள்ளது.
2025 யூரோவிஷன் பாடல் போட்டியை ஏற்பாடு செய்வதற்காக Basel கன்டோனல் நாடாளுமன்றம் அண்மையில் 37.5 மில்லியன் பிராங்குகளை வழங்க அனுமதி அளித்திருந்தது.
ஏற்கனவே கிறிஸ்தவக் கட்சியும் இந்த போட்டிக்கு எதிர்ப்பு வெளியிட்டிருந்தது.
மூலம் – Swissinfo


