23.5 C
New York
Thursday, September 11, 2025

யூரோவிஷன் பாடல் போட்டி எதிராக பொதுவாக்கெடுப்புக்கு அழைப்பு.

Basel இல் நடைபெறவுள்ள யூரோவிஷன் பாடல் போட்டியைத்  தடுப்பதற்கான பொது வாக்கெடுப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

2025 மே 13  ஆம் திகதி முதல் 17 ஆம் திகதி வரை இந்தப் போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ள சுவிஸ் பெடரல் ஜனநாயக  யூனியன்,  நவம்பர் 24ஆம் திகதி  பொது வாக்கெடுப்பு நடத்தக் கோரி,  4203 பேரின் கையெழுத்துக்களை சமர்ப்பித்துள்ளது.

2025 யூரோவிஷன் பாடல் போட்டியை  ஏற்பாடு செய்வதற்காக Basel  கன்டோனல் நாடாளுமன்றம் அண்மையில் 37.5 மில்லியன்  பிராங்குகளை வழங்க அனுமதி அளித்திருந்தது.

ஏற்கனவே கிறிஸ்தவக் கட்சியும் இந்த போட்டிக்கு எதிர்ப்பு வெளியிட்டிருந்தது.

மூலம் – Swissinfo

Related Articles

Latest Articles