சூரிச்சில் பலஸ்தீனம் மற்றும் லெபனானுக்கு ஆதரவான பேரணி ஒன்று நடத்தப்பட்டுள்ளது.
இஸ்ரேலின் தாக்குதல்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், லெபனான் மற்றும் பலஸ்தீன மக்களுக்கு ஆதரவாகவும் Helvetiaplatz இல் நேற்று மாலை 3 மணிக்கு இந்தப் பேரணி நடத்தப்பட்டது.
இனப்படுகொலையை நிறுத்து, பலஸ்தீனத்திற்கு விடுதலை போன்ற கோசங்களை எழுப்பியவாறு ஆயிரத்திற்கும் அதிகமானோர் வீதியில் அணிவகுத்துச் சென்றனர்.
பேரணியின் தொடக்கத்தில் ஒரு நிமிட மௌன வணக்கமும் செலுத்தப்பட்டது.
மூலம் – Zueritoday