Meilen இல், சூரிச் கன்டோனல் பொலிசாரும், Meilen மாநகர பொலிசாரும் இணைந்து கடந்த இரண்டு நாட்களாக பரவலான வாகனச் சோதனைகளை முன்னெடுத்தனர்.
இதன் போது, 11 ஓட்டுநர்கள் மது அல்லது போதைப்பொருள் உட்கொண்டு வாகனம் ஓட்ட தகுதியற்ற நிலையில் வாகனம் ஓட்டியதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் தொடர்பாக, சட்டமா அதிபர் அலுவலகம் அல்லது ஆளுநர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.
அவர்களில் 9 வாகன ஓட்டிகளின் ஓட்டுனர் அனுமதிப்பத்திரங்கள் தற்காலிகமாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
மூலம் – Zueritoday