7.1 C
New York
Monday, December 29, 2025

இரு சுவிஸ் சட்டத்தரணிகளுக்கு அமெரிக்கா தடை.

அமெரிக்க திறைசேரியின் வெளிநாட்டு சொத்துக் கட்டுப்பாட்டு அலுவலகம் (OFAC),  இரண்டு சுவிஸ் சட்டத்தரணிகளை தடைப் பட்டியலில் சேர்த்துள்ளது.

ரஷ்ய வாடிக்கையாளர்களுக்காக, பொருளாதாரத் தடைகளைத் தவிர்க்க உதவும்  வகையில், நிறுவனங்களையும் அறக்கட்டளைகளையும் உருவாக்கிக் கொடுத்தார்கள் என்பதாலேயே இந்த தடையை அமெரிக்கா விதித்துள்ளது.

இரண்டு நபர்களும் சட்டவிரோதமான பணப் புழக்கத்திற்கு வழிவகுத்ததாக அமெரிக்கத் தூதரகம் கூறியுள்ளது.

சுவிஸ் சட்டத்தில் உள்ள ஓட்டை காரணமாக அவர்கள் கண்காணிப்பில் இருந்து தப்பினர் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

மேம்பட்ட தொழில்நுட்பங்களை ரஷ்யாவிற்கு வழங்குவதாக குற்றம்சாட்டி பத்துக்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள 400 தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு எதிராக அமெரிக்கா புதிய தடைகளை வெளியிட்ட நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மூலம் -Swissinfo

Related Articles

Latest Articles