ஒரு கிலோ கொகைன் போதைப் பொருளைக் கடத்த முயன்ற பெண் ஒருவர் சூரிச் விமான நிலையத்தில் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் கடந்த சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது.
சாவோ போலோவில் இருந்து சூரிச் வந்த 22 வயதுடைய பிரேசில் நாட்டுப் பெண், ஐஸ்லாந்து செல்ல முயன்ற போதே பொலிசாரால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டார்.
அவர் தனது உடலினுள் 1 கிலோ கொகைன் போதைப் பொருளை மறைத்து வைத்திருந்ததை பொலிசார் கண்டுபிடித்து அவரைக் கைது செய்தனர்.
மூலம்- zueritoday.

