Belkin தயாரித்த அப்பிள் வோச் சார்ஜர் பற்றி The Federal Inspectorate for Heavy Current Installations எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதனால் தீ விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
“Belkin BoostCharge Pro Fast Wireless Charger for Apple Watch + Power Bank 10k” என்ற சார்ஜர் தீ விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
நுகர்வோர் இனி சாதனங்களைப் பயன்படுத்தக் கூடாது.
சில சூழ்நிலைகளில், சார்ஜரின் லித்தியம்-அயன் பற்றரிகள் அதிக வெப்பமடையும்.
இது, மொடல் இலக்கம் “BPD005” கொண்ட சார்ஜர்களை (ஒருங்கிணைந்த பவர் பாங்க் உட்பட) பாதிக்கிறது.
இந்த மொடல் இலக்கம் சார்ஜரின் பின்புறத்தில், தயாரிப்பின் மேல் இடதுபுறத்தில் அமைந்துள்ளது.
குறைபாடுள்ள சாதனங்களை வாங்குபவர்கள் 0848 000 219 என்ற இலக்கத்துடன் Belkinஐ தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
அவர்கள் முழுப் பணத்தையும் திரும்பப் பெறுவார்கள்.
சாதனங்களை குப்பையில் போடக்கூடாது என்று மத்திய அரசு எச்சரித்துள்ளது.

