Zug நகர மையத்தில் பல வாகனங்களுக்குத் தீ வைத்த சந்தேகத்திற்குரிய குற்றவாளியைப் பொலிசார் கைது செய்துள்ளனர்.
சந்தேக நபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக, Zug கன்டோனல் பொலிசார் தெரிவித்தனர்.
வியாழக்கிழமை மாலை Bundesplatz அருகே மற்றொரு வாகனத்திற்கு தீ வைப்பதற்கான தயாரிப்புகளில் ஈடுபட்டிருந்த போது அந்த நபர் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 44 வயதான லிதுவேனியர் என பொலிஸ் அறிக்கை தெரிவிக்கிறது.
செவ்வாய்க்கிழமை இரவு Zug நகரில் இரண்டு கார்கள் தீப்பிடித்து எரிந்தன.
மூன்றாவது வாகனம் புதன்கிழமை இரவும், மற்றொன்று ஒக்டோபர் 23 ஆம் திகதியும் தீக்கிரையாக்கப்பட்டன.
அதிகாரிகளின் விசாரணைகளில், நான்கு வாகனங்களும் “வேண்டுமென்றே” தீவைத்து எரிக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.
மூலம் – bluewin

