Neuhausen am Rheinfall இல் இன்று அதிகாலை வீடு ஒன்றில் பாரிய தீவிபத்து ஏற்பட்டுள்ளது.
தகவல் கிடைத்து தீயணைப்பு பிரிவினர் செல்லும் போது வீடு முழுவதும் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்ததாக Neuhausen பொலிசார் தெரிவித்தனர்.
அருகில் உள்ள வீடுகளுக்கு நெருப்பு பரவாத வகையில் தீயணைப்பு பிரிவினர் நடவடிக்கை எடுத்ததால் பாரிய அனர்த்தம் தவிர்க்கப்பட்டது.
தீப்பிடித்த போது வீட்டில் ஆட்கள் எவரும் இல்லை என்றும் அதனால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும், பொலிசார் தெரிவித்தனர்.
இந்த தீவிபத்துக்கான காரணம் குறித்து பொலிசார் விசாரித்து வருகின்றனர்.
மூலம்- zueritoday

