Kloten இல், நேற்றிரவு, பெருமளவு கார்களுடன் பலர் அனுமதியின்றிக் கூடியதால் சூரிச் பொலிசார் சோதனையில் ஈடுபட்டனர்.
நேற்றிரவு இரவு 8.30 மணியளவில், விமான நிலையத்திற்கு அண்மையில் உள்ள வாகன நிறுத்துமிடத்தில், ஏராளமான வாகனங்கள் மற்றும் நபர்கள் தேவையற்ற சத்தத்தை ஏற்படுத்துவதாக சூரிச் கன்டோனல் பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
பொலிசார் அந்த பகுதியை சுற்றி வளைத்து, மேலும் வாகனங்கள் அந்தக் கூட்டத்தில் சேரவிடாமல் தடுத்தனர்.
அங்கிருந்த வாகனங்கள் மற்றும் சுமார் 175 சாரதிகள் மற்றும் அவர்களது பயணிகளும் சோதனை செய்யப்பட்டதாக சூரிஸ் பொலிஸ் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சோதனை செய்யப்பட்ட 60 வாகனங்களில் எட்டு வாகனங்கள் தொழில்நுட்ப தேவைகளை பூர்த்தி செய்யவில்லை.
ஜெர்மன் மொழி பேசும் பல சுவிஸ் கன்டோன்களிலிருந்தும், ஜெர்மனியிலிருந்தும் வாகனங்கள் வந்ததாக கன்டோனல் பொலிசார் தெரிவித்தனர்.
இந்தச் சோதனைகள் நள்ளிரவு வரை நீடித்துள்ளது.
மூலம்- zueritoday

