4.4 C
New York
Monday, December 29, 2025

பேர்ன் பாடசாலைக்கு அச்சுறுத்தல்- இன்று மூடப்படுவதாக அறிவிப்பு.

அச்சுறுத்தல் காரணமாக பெர்னில் உள்ள BFF Bern பாடசாலை இன்று செவ்வாய்க்கிழமை மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பாடசாலை  நிர்வாகம் ஊழியர்கள் மற்றும் மாணவர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளது.

மின்னஞ்சல் மூலமாக விடுக்கப்பட்ட அச்சுறுத்தலை அடுத்து, பேர்ன் கன்டோனல் பொலிசாருடன் ஆலோசனை நடத்தியதை தொடர்ந்து, இன்று பாடசாலை மற்றும் தொழிற்பயிற்சி நிலைய கட்ட டங்களை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் பாடங்கள் இணைய வழியில் முன்னெடுக்கப்படும் என்றும் நாளை வழமை போல பாடசாலை இயங்கும் என்றும் நிர்வாகம் அறிவித்துள்ளது.

மூலம் -20min.

Related Articles

Latest Articles