30.5 C
New York
Wednesday, August 19, 2026

திடீரென தீப்பற்றி எரிந்த கார்.

Büttenhardt இல் நேற்று பிற்பகல் 3 மணியளவில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக வாகனம் ஒன்று தீப்பற்றி எரிந்து நாசமாகியது.

வாகனத்தில் இருந்தவர்கள் சரியான நேரத்தில் வெளியேறியதால், காயங்களின்றி தப்பினர்.

53 வயதுடைய சாரதி வாகனத்தை ஓட்டிக் கொண்டிருந்த போது முன் பக்கத்தில் வித்தியாசமான சத்தத்தை கேட்டுள்ளார்.

அதையடுத்து முன்புறத்தில் இருந்து புகை வெளிவரத் தொடங்கியுள்ளது.

உடனடியாக சாரதியும் இரண்டு பயணிகளும் வாகனத்தை விட்டு வெளியேறினர்.

கார் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக  Schaffhausen பொலிசார் தெரிவித்தனர்.

மூலம்- zueritoday

Related Articles

Latest Articles