-0.5 C
New York
Tuesday, December 30, 2025

பாறைகள் சரியும் ஆபத்து- கிராமத்தை விட்டு வெளியேற உத்தரவு.

கிழக்கு சுவிட்சர்லாந்தில் உள்ள Brienz-Brinzauls கிராமம், பாறை சரிவு  அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதால், அங்குள்ள மக்களை, ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1 மணிக்குள் வெளியேற  வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து குடியிருப்பாளர்களும் கிராமத்தை விட்டு வெளியேற வேண்டும் என, உள்ளூர் அரச நிர்வாகம் அறிவித்துள்ளது.

இந்த வெளியேற்றம் பல மாதங்கள் நீடிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆரம்ப எச்சரிக்கை சேவை, புவியியல் மற்றும் இயற்கை ஆபத்துகள் நிபுணர் குழு மற்றும் பிற புவியியலாளர்களுடன் இணைந்து ஆபத்து சூழ்நிலையை ஆய்வு செய்த பின்னர், Brienz-Brinzauls கிராமத்திற்கு இந்த வெளியேற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக Albula நகரச சபை அறிக்கை தெரிவிக்கிறது.

செப்டம்பர் பிற்பகுதியில் இருந்து, Brienz-Brinzauls க்கு மேலே உள்ள மலைச் சரிவில் சுமார் 1.2 மில்லியன் கன மீட்டர் பாறைச் சிதைவுகள்,  ஒரு நாளைக்கு 20 முதல் 35 சென்டிமீட்டர்கள் வரை கீழ்நோக்கி நகர்கின்றன.

அது தளர்வாகி, பின்னர் வேகமாக  கிராமத்தை நோக்கி சரியும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

மூலம்- swissinfo

Related Articles

Latest Articles