-0.5 C
New York
Tuesday, December 30, 2025

உடைகளை மறுசுழற்சி செய்ய நடவடிக்கை.

சுவிட்சர்லாந்தில் உடைகளை மறுசுழற்சி செய்வதற்கான நடவடிக்கைகள்  ஆரம்பிக்கப்படவுள்ளன.

இதற்கான திட்டங்களைச் செயற்படுத்தும் நோக்கில் அடைக் கைத்தொழில் துறையை சேர்ந்த  ஏழு நிறுவனங்கள் இணைந்து ஒரு  சங்கத்தை உருவாக்கியுள்ளன.

Calida, Mammut, Odlo, PKZ, Radys, Switcher மற்றும் Workfashion ஆகிய நிறுவனங்கள் இந்த சங்கத்தில் இணைந்துள்ளன.

இதன் அடிப்படை நோக்கம் உடைகளை மீள் பயன்பாட்டுக்கு உட்படுத்துதல், திருத்தம் செய்தல் மற்றும் மறு சுழற்சி செய்தல் ஆகும்.

பிளாஸ்டிக் மறுசுழற்சியை முன்னுதாரணமாக கொண்டு இதனையும் முன்னெடுப்பதற்கு திட்டமிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மூலம்- swissinfo

Related Articles

Latest Articles