23.8 C
New York
Friday, August 14, 2026

துப்பாக்கியுடன் காரில் சென்றவர் கைது.

மாவட்டம் 9இல் சட்டவிரோதமாக துப்பாக்கியை காரில் எடுத்துச் சென்ற ஒருவரை சூரிச் பொலிசார் கைது செய்துள்ளனர்.

நேற்று அதிகாலை 12.15 மணியளவில் சந்தேகத்திற்குரிய வாகனம் ஒன்றை பொலிசார் நிறுத்திச் சோதனையிட முயன்றனர்.

அப்போது 29 வயதுடைய கார்  ஓட்டுநர் அதற்கு ஒத்துழைக்க மறுத்தார்.  இயந்திரத்தின் இயக்கத்தையும் நிறுத்த மறுத்தார்.

இதனால், பொலிசாருடன் முரண்பாடு ஏற்பட்டது.

இந்த நிலையில் காரைச் சோதனையிட்ட போது அதில் துப்பாக்கி ஒன்று இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு கைப்பற்றப்பட்டது.

இதையடுத்து குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டு சட்டவிரோமாக துப்பாக்கி வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன.

மூலம்- 20min

Related Articles

Latest Articles