14.8 C
New York
Monday, September 28, 2026

ட்ராம் மோதி பாதசாரி பலி.

சூரிச்சில், Steinweisstrasse இற்கு அருகேயுள்ள Hottingerstrasse சந்திப் பகுதியில் ட்ராம் மோதி பாதசாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் நேற்று முன்தினம் மாலை 6 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

- Advertisement -

வீதியைக் கடந்து செல்ல முற்பட்ட பாதசாரி 3 ஆவது பாதையில் வந்து கொண்டிருந்த ட்ராமுடன் மோதி விபத்துக்குள்ளானார்.

அந்தச் சம்பவத்தில் படுகாயம் அடைந்த பாதசாரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

41 வயதுடைய ஆண் ஒருவரே இந்த விபத்தில் உயிரிழந்தார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த இடத்தில் அடிக்கடி இத்தகைய விபத்துகள் இடம்பெறுவதாக பொதுமக்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

மூலம்- 20min

Related Articles

Latest Articles